அத செய்றது என் ‘கடமை’.. ஒரே ஒரு ‘ட்வீட்’ல மொத்த சர்ச்சைக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்சிட்டீங்களே தலைவா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியில் விளையாட இடம் கிடைக்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இம்ரான் தாகீர் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பந்துவீச்சு ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பியே வருகிறது. மிக எளிதான இலக்கை கூட எட்ட முடியாமல் சென்னை அணி தொடர் தோல்விகள சந்தித்தது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடர்களை விட தற்போது அணியில் பல மாற்றங்களை கேப்டன் தோனி மேற்கொள்கிறார். அதில் ஜெகதீஷன், ஹசீல்வுட் போன்ற வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கி வருகிறார். ஆனால் கடந்த சீசனில் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட இடம் கொடுக்கவில்லை.

இந்த சமயத்தில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது இம்ரான் தாகீர் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் சுமந்து வந்தார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனால் மிட் டிரான்ஸ்பர் மூலம் இம்ரான் தாகீர் வேறு அணிக்கு மாற்றப்படுவாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து இம்ரான் தாகீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் களத்தில் விளையாடிய போது நிறைய வீரர்கள் எனக்கு தண்ணீர் சுமந்து வந்துள்ளனர். களத்தில் தகுதியான வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு உதவுவது என் கடைமை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என் கடைமையை சரியாக செய்ய பாடுபடுவேன். ஆனால் எனக்கு அணியின் நலன் தான் முக்கியம்’ என இம்ரான் தாகீர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் பல சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இம்ரான் தாகீரின் இந்த பெருந்தன்மையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்