"ரொம்ப 'Control' பண்றாரு.." கோலி - கும்ப்ளே சர்ச்சை குறித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே இருந்த போது, அணிக்குள் நடந்த சர்ச்சை சம்பவங்கள் பற்றி சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த சமயத்தில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு, இந்திய அணியை நிர்வகித்து வந்தது.

இந்திய அணியில் சர்ச்சை

அந்த சமயத்தில், அணில் கும்ப்ளே மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே கடும் மோதல் இருந்து வந்தது. அணில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீங்க வேண்டும் என விராட் கோலி தினமும் தெரிவித்து வந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகி, சர்ச்சையை உண்டு பண்ணி இருந்தது.

பதவியை ராஜினாமா செய்த கும்ப்ளே

தொடர்ந்து இது பற்றி, கோலி மற்றும் கும்ப்ளே ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு, கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் தொடரலாம் என தெரிவிக்கப்பட்ட போதும், தனது பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்து கொண்டார். இதன் பின்னர் தான், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டிருந்தார்.

அதிருப்தியில் இருந்த இந்திய அணி

அந்த சமயத்தில், பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவராக இருந்த வினோத் ராய், ஒரு புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், கோலி - கும்ப்ளே பிரச்சனைகள் குறித்த விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. இதில், "அளவுக்கு அதிகமாக ஒழுக்க கட்டுப்பாடுகளை அணில் கும்ப்ளே விதிப்பதாக என்னிடம், கோலி மற்றும் அணியினர் தெரிவித்திருந்தனர். கும்ப்ளேவின் செயலால் அணியினரும் அதிகம் அதிருப்தியில் இருந்தனர்.

என்ன மதிக்கவே இல்ல

மேலும், அணியிலுள்ள இளம் வீரர்கள், அணில் கும்ப்ளேவின் செயல்பாடு காரணமாக, அதிகம் பயம் கொள்வதாகவும் கோலி என்னிடம் தெரிவித்தார். இது பற்றி, இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த அணில் கும்ப்ளேவிடம் நாங்கள் பேசினோம். கேப்டன் மற்றும் அணி வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, தான் நடத்தப்பட்ட விதம் பற்றியும் கடுப்பானார். ஒரு சீனியராக ஒழுக்கம் மற்றும் தொழில் முறை ஆகியவற்றை வீரர்களுக்கு கற்பித்து கொடுப்பது தான் என் கடமை. என்னுடைய கருத்துக்கு வீரர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அது எதுவும் நடக்காமல் போனது என கும்ப்ளே வருத்தத்துடன் தெரிவித்தார்" என தன்னுடைய புத்தகத்தில் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்திய அணியில் நடந்த சம்பவம் பற்றி அப்போது உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர், தன்னுடைய புத்தகத்தில் தற்போது குறிப்பிட்டுள்ளது பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIRATKOHLI, ANIL KUMBLE, அணில் கும்ப்ளே, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்