10 ரன்னுக்கு ஆல் அவுட்டான அணி.. 2வது பேட்டிங்கில் எதிரணி செய்த தரமான சம்பவம்.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக அளவில் பல நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு கோடிக்கணக்கான அளவில் ரசிகர்களும் உள்ளனர்.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வெறித்தனமான சினிமா ரசிகரா இருப்பாரோ"... 17 வருசமா தியேட்டரில் பார்த்த 470 படங்கள்.. வைரலாகும் குறிப்புகள்..

அதிலும் இன்று ஏராளமான நாடுகளில் டி 20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால் கிரிக்கெட் இன்னும் விறுவிறுப்பான ஒரு விஷயமாகவும் கிரிக்கெட் போட்டி மாறி உள்ளது. அதே போல அவ்வப்போது கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் வினோதமான விஷயமோ அல்லது மிக மிக புதுமையான ஒரு சாதனை குறித்த செய்தியோ அதிகம் வைரல் ஆவதையும் நாம் கவனித்து இருப்போம்.

அந்த வகையில் தற்போது கிரிக்கெட் போட்டியில் நடந்த வைரல் சம்பவம் குறித்த செய்தி தான் இணையத்தை அதிகம் கவனம் பெற்று வருகிறது.

ஸ்பெயின் மற்றும் ஐல் ஆஃப் மேன் (பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஒரு தீவு) என்ற அணிகளுக்கிடையே ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் நான்கு போட்டிகளை வென்றிருந்த ஸ்பெயின் அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆறாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதி இருந்தன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐல் ஆஃப் மேன் அணி வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆகி இருந்தது. ஒன்பது ஓவருக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்த ஐல் ஆஃப் மேன் அணியில் அதிகபட்சமாக ஒரு வீரர் நான்கு ரன்கள் எடுத்திருந்தார் இது தவிர மூன்று வீரர்கள் தலா 2 ரன்கள் எடுத்திருக்க, மற்ற அனைத்து வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன்பு பிக் பேஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி 15 ரன்களில் ஆட்டம் இழந்தது தான் டி20 போட்டிகளில் குறைவான ரன்னாக இருந்தது. தற்போது அதில், ஐல் ஆஃப் மேன் அணி 10 ரன்களில் ஆல் அவுட்டாகி முதலிடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இன்னொரு சுவாரசியமாக, இலக்கை நோக்கி ஆடி இருந்த ஸ்பெயின் அணி இரண்டே பந்துகளில் போட்டியை முடித்துள்ளது. அதாவது நோ பால் உட்பட இரண்டு பந்துகளும் சிக்சர்ராக மாறி இருந்த நிலையில் ஸ்பெயின் அணி இரண்டே பந்தில் 13 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | காணாமல் போன மாடல் அழகி.. ஃப்ரிட்ஜில் இருந்த கால்கள்?.. கதிகலங்கி நின்ற போலீஸ்.. என்ன நடந்தது?

CRICKET, ISLE OF MAN TEAM, SPAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்