‘காயத்தில் இருந்து சீனியர் நட்சத்திர வீரர்’... சீக்கிரமே தேறிடுவாரு’... ‘பிசிசிஐ-க்கு நம்பிக்கை அளித்த தகவல்’... ‘ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க வாய்ப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத முன்னணி வீரரான இஷாந்த் சர்மா, விரைவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்தத் தொடரில், பங்கேற்க இருந்த முன்னணி வீரரான இஷாந்த் சர்மா, ஐபில் போட்டியின்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடிய அவர், காயம் காரணமாக 13-வது சீசனிலிருந்து விலகி இந்தியா திரும்பினார்.
பின்னர் இஷாந்த் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் முதலில் விளையாடப்படும் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். இதனால், இந்திய அணியின் பௌலிங் ஆர்டரை பலப்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
அதில் முக்கியமானவராக இஷாந்த் சர்மா உள்ள நிலையில், அவர் ராகுல் டிராவிட் தலைமையில் தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆஸ்திரேலியா தொடரில் இட் பெறாததால், தன்னுடைய பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்டர் -19 பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேவிடம் அவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, மாம்ப்ரேவுடன் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம், டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் இஷாந்த் பிட்னசில் வெகு சிறப்பாக தேறுவார் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய தொடரில் அவர் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் உடற்தகுதி தேர்வு செய்ப்பட்டு விரைவில் அவர், ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இஷாந்த் சர்மா இந்திய அணியின் சீனியர் பவுலர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி பவுலராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் காயம் காரணமாக சேர்க்கப்படாத ரோகித் சர்மாவும் விரைவில் குணமடைந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என நம்பப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் இவர்தான்!' - புகழ்ந்து தள்ளிய உலக லெவல் ‘கிரிக்கெட்’ பிரபலம்!
- 'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...!!!
- 'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...!!!
- ‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்!
- ‘வாய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...!!!
- ‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...!!!
- ‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல???’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...!!!
- 'வாய்க்கு வந்தத ஒலராதீங்க!'.. 'பிளேயர்ஸ் இன்ஜுரி பத்தி 'இவங்களுக்கு' புரிதலே இல்ல!'.. மௌனம் கலைத்து... கடும் கோபத்தில்... கொந்தளித்த கங்குலி!
- 'இன்னொரு ஐபிஎல் டீம்-ஆ?'.. 'இவங்களுக்குத் தான் கொடுக்கணும்!'.. வலுக்கும் சிபாரிசுகள்!.. அவசர அவசரமாக வேலை செய்யும் கங்குலி!.. கடும் போட்டி... யாருக்கு ஜாக்பாட்?
- 'இப்டி எல்லாம் செய்யலாமா’...??? ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’????