இந்திய அணியின் ‘சீனியர்’ பவுலருக்கு காயம்.. ‘பவுலிங் வீசும் கை விரலில் தையல்’!.. இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது விரலில் காயம் ஏற்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின்போது நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அடித்த பந்தை இஷாந்த் ஷர்மா தடுக்க முயன்றார். அப்போது அவரது வலது கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விரலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தையல் போட்டுள்ளனர். இதனால் சில நாட்கள் இஷாந்த் ஷர்மா ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கு முன் இஷாந்த் ஷர்மாவின் காயம் குணமாகிவிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை இஷாந்த் ஷர்மா விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஷாந்த் ஷர்மாவின் காயம் குறித்து கூறிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ‘இஷாந்த் ஷர்மாவின் காயம் 10 நாள்களில் சரியாகிவிடும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் 20 நாட்கள் இருப்பதால், அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார்’ என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பவுலிங் வீசும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் 5 போட்டிகளில் பந்து வீச முடியாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்