'நீங்க அவுட் .. நடைய கட்டுங்க’னு சொன்ன வீரர்.. இதோ, கோலியின் அந்த 'மரண மாஸ்' ரிப்ளை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் போட்டியில் தனக்கும் கோலிக்கும் இடையில் நடந்த படு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை இஷாந்த் ஷர்மா தற்போது போட்டு உடைத்துள்ளார்.

இதுபற்றி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணைய சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த ஐபிஎல் சீசனில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக, தான் விளையாடி வரும் நிலையில், சமீபத்தில் ஆர்சிபி அணியுடன் டெல்லி அணி மோதிய போட்டி ஒன்றில் தனக்கும் கோலிக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தை பற்றி இஷாந்த் ஷர்மா முழுமையாக பேசியுள்ளார்.

இஷாந்த் ஷர்மா அந்த பேட்டியில் கூறியதாவது:

டி20ஐ பொறுத்தவரை, நமக்கு இருக்கும் 4 ஓவர்களில் சிக்கனமாக பவுலிங் செய்ய வேண்டியுள்ளது. விக்கெட்டுக்கு எய்ம் செய்தால், பந்துகளை இழக்க வேண்டியிருக்கும். இருந்தும் நான் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். ஆனால் டெல்லியில் ஆர்சிபிக்கு எதிராக டெல்லி அணியில் நான் விளையாடியபோது 4 ஓவர்களில் 41 ரன்களை கொடுத்தேன்.

பிறகு நான் பௌலிங் போட்ட பந்து ஒன்றை கோலி எட்ஜ் செய்தார். ஆனால் அது சரியான கேட்ச்தான் என நான் கருதினேன். அவரோ அவுட் இல்லை என்று நம்பினார். இதனிடையே நான் ‘நீங்க அவுட் ஆயிட்டீங்க.. நடையக் கட்டுங்க.. போங்க’ என்றேன். ஆனால், நாட் அவுட் என்று ரிசல்ட் வந்தது. அப்போது கோலி என்னைப் பார்த்து,  ‘அது பிட்ச் ஆகிதான் போச்சு... நீ போய் பௌலிங் போடு’என்றார்.

ஒருவேளை அவர் அவுட் ஆகியிருந்தால், அடுத்த பந்தில் அவர் என்னை சிக்ஸர் அடித்திருக்க மாட்டார். ஆம், அதற்கு அடுத்த பந்தோ சிக்ஸர். என் அனாலிசிஸை கோலி தவிடுபொடியாக்கினார்.

IPL, IPL2019, VIRATKOHLI, ISHANT SHARMA, RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்