"ஒரு மாசம் அதை நெனச்சு அழுதேன்".. சிக்கித் தவித்த இஷாந்த்.. தோனி, தவான் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் இஷாந்த் ஷர்மா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனது காதலிக்கு மெசேஜ் செய்து.. தொல்லை கொடுத்த நண்பனை கொன்று.. "இதயத்தை வெளியே எடுத்து".. குலைநடுங்க வைத்த இளைஞர்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மோதி இருந்த ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி, 3 பந்துகள் மீதம் வைத்து ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கையும் எட்டிப் பிடித்திருந்தது.

கடைசி மூன்று ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்திய அணி வெற்றி பெறும் என கருதப்பட்ட சூழலில், 48 ஆவது ஒவரை வீசிய இஷாந்த் ஷர்மா, ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார். ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர், அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்க விட, ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெறவும் செய்திருந்தது. இஷாந்த் ஷர்மாவின் மோசமான பந்துவீச்சு தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என ஒரு விமர்சனம் இருந்து வந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், இது பற்றி தற்போது பேசியுள்ள இஷாந்த் சர்மா "அந்த போட்டியில் நான் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த சமயத்தில், நான் என்னுடைய வருங்கால மனைவியுடன் நான் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அவருடன் தொலைபேசியில் பேசும் சமயத்தில் நான் இதை பற்றி குறிப்பிட்டு அழுது கொண்டே இருந்தேன். என்னால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நான் தினமும் அவரிடம் பேசும் போது அழுதேன்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த போட்டிக்கு பிறகு தோனி மற்றும் தவான் ஆகிய இருவரும் என்னுடைய அறைக்கு வந்து நான் நன்றாக விளையாடுவதாக கூறி என்னை தேற்றினார்கள். நான் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர் இல்லை என்ற ஒரு பார்வை என்னை சுற்றி அப்போது உருவானது" என இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் அது தனது கிரிக்கெட் கரியரில் மிக மோசமான காலகட்டம் என்றும் இஷாந்த் ஷர்மா குறிப்பிட்டிருந்தார்.

Also Read | "சிறந்த பெண் கோமாளி".. குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. செஃப் வெங்கடேஷ் பட்டின் எமோஷனல் கமெண்ட்!!

CRICKET, ISHANT SHARMA, MS DHONI, DHAWAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்