"நான் ஒன்னும் அவர் இடத்துக்கு ஆசைப்படல" - மனம் திறந்த இந்திய வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பண்ட்டின் இடம் எனக்கு வேண்டும் என்று ஒரு போதும் என் மனதில் தோன்றியதில்லை, அவருக்கும் அப்படித்தான் இருந்தது என இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியோட அடுத்த பவுலிங் பயிற்சியாளர் இவர் தான் போல! செம சிபாரிசாம்
இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்க்கு பதில் தான் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தனது மனதில் தோன்றவில்லை என்றும், அதுதான் பன்ட்டுக்கும் தோன்றும் என்று தான் நம்புவதாக இந்திய இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உள்ளார், மேலும் இஷான் கிஷன் டி20 சர்வதேச மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பேக்-அப் ஓப்பனராகவும், பேக்-அப் விக்கெட் கீப்பராகவும் பார்க்கப்படுகிறார்.
தானும் ரிசப்பும் மிகவும் நல்ல நண்பர்கள் என்றும், கிரிக்கெட்டைப் பற்றியும், கிரிக்கெட்டில் எப்படி முன்னேறலாம் என்பதைப் பற்றியும் நிறைய பேசுவதாகவும் இஷான் கிஷான் கூறியுள்ளார். மைதானத்தில் நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளர்களைப் பார்ப்பதில்லை என்றும் இஷான் கிஷன் கூறினார்.
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங்கை விரும்புவதாகவும், இந்தியாவுக்காக விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட உள்ளதாகவும் கூறினார்.
"ஒரு திறமையான வீரருடன் நல்ல போட்டி இருக்கும் போது, அது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அந்த முக்கியமான விஷயங்களை நீங்களே உணர ஆரம்பிக்கும் போது நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், மற்ற அனைத்தும் தானாக நடக்கும். எனக்கு விக்கெட் கீப்பிங் மிகவும் பிடிக்கும் அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னால் முடிந்ததை அணிக்கு கொடுக்க முயற்சிப்பேன்" என இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கிஷன் சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் 35(42), 2(10) & 34(31) ரன்களைப் பதிவு செய்தார்.
"பிசிசிஐ கேட்டாலும் சொல்ல மாட்டேன்.." வாயடைக்க வைத்த சஹா.. "அப்படி என்ன தான்பா பிரச்சனை?"
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டி20 மேட்ச் இப்படித்தான் இருக்கும்.. சிஎஸ்கே வீரருக்கு செம்ம வாய்ப்பு.. ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு!
- இந்திய கிரிக்கெட் அணியோட அடுத்த பவுலிங் பயிற்சியாளர் இவர் தான் போல! செம சிபாரிசாம்
- 2 வருஷத்துக்கு அப்பறம் மகனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் வீடியோ..!
- "ருத்துராஜ்-க்கு சான்ஸ் குடுக்க வேணாம்.." முன்னாள் வீரர் சொல்லும் காரணம்.. ஓஹோ, இதான் விஷயமா??
- ருத்ராஜ் கெய்க்வாட் ஏன் இந்திய அணில விளையாட விடமாட்றீங்க? ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், இஷான் கிசனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
- ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'
- "எனக்காக மும்பையும் (MI) சென்னையும் (CSK) சண்டை போட்டது தான் என் வாழ்க்கைல BEST MOMENT!" - இளம் வீரரின் வைரல் பேச்சு
- "இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கனும்" - மிகவும் வருத்தப்பட்ட மேக்ஸ்வெல்! என்ன காரணம்?
- "என்னய்யா ஏலம் எடுத்து வச்சிருக்கீங்க..அவருக்கெல்லாம் ஓவர் தொகை..மும்பை இந்தியன்ஸை டேமேஜ் செய்த ஆஸி.வீரர்..!
- சிஎஸ்கே இல்லாம இன்னொரு டீமா??.. தீபக் சாஹர் கொடுத்த ரியாக்ஷன்.. உருக்கமான மெசேஜ்!!