‘எதர்ச்சையா.. நீங்கவேற எல்லாம் பக்கா ப்ளான்’!.. அசால்ட்டா பேசி ‘அசரவைத்த’ பர்த்டே பாய்.. நீங்க ‘வேறலெவல்’ தம்பி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்த சிக்ரெட்டை இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கருணாரத்னே 43 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை அடுத்து 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட்டாக, அடுத்து வந்த இஷான் கிஷன் 42 பந்துகளில் 59 ரன்கள் அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மனிஷ் பாண்டே 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் எடுத்தனர். இதனால் 36.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.
இந்த நிலையில் இந்திய அணியின் அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார். இதுகுறித்து போட்டி முடிந்தபின் இஷான் கிஷனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘எனக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தால், முதல் பந்திலேயே சிக்ஸ் அடிப்பேன் என டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது அனைவரிடமும் கூறியிருந்தேன். அதனால், நான் அப்படிதான் அடிப்பேன் என முன்பே எல்லோருக்கும் தெரியும். என்னுடைய பிறந்த நாளில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது’ என இஷான் கிஷன் சாதாரணமாக பதிலளித்தார்.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இஷான் கிஷன், 42 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடித்து 59 ரன்கள் குவித்தார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் அறிமுக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் பெருமையை இவர் அடைந்துள்ளார். அதேபோல் இஷான் கிஷன், நேற்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மேட்சுக்கு இன்னும் 1 நாள்தான் இருக்கு’!.. திடீரென விலகிய இலங்கை வீரர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ‘எனக்கு ரொம்ப வருத்தம்’!.. அவருக்கு ஏன் ‘கேப்டன்’ பொறுப்பு கொடுக்கல..? புது குண்டை தூக்கிப்போட்ட பயிற்சியாளர்..!
- ‘மாற்றப்பட்ட தேதி’!.. இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும்..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ‘இதுக்கு மேட்ச் நடத்தாமலே இருக்கலாம்’!.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு.. முன்னாள் வீரர் கடும் விமர்சனம்..!
- ‘எல்லாரையும் தனிமைப்படுத்துங்க’.. 3 பேருக்கு கொரோனா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு..!
- செய்தியாளர்கள் எழுப்பிய ‘சர்ச்சை’ கேள்வி.. ‘இதை நீங்க அவங்க கிட்டதான் கேட்கணும்’!.. நைசாக நழுவிய கங்குலி..!
- ‘பாக்கதான போறீங்க இந்த பாண்ட்யாவோட ஆட்டத்த’!.. சூர்யகுமார் கொடுத்த ‘மிரட்டல்’ அப்டேட்..!
- ‘அந்த ரெண்டு பேரை உடனே இங்கிலாந்துக்கு அனுப்பி வைங்க’!.. கோரிக்கை வைத்த கோலி?.. மறுத்த தேர்வுக்குழு..!
- ‘கொஞ்சம் நல்லா பாருங்க சார்.. இவங்களா வீக்கான டீம்’!.. முன்னாள் இலங்கை வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமே கொடுத்த ‘வேறலெவல்’ பதிலடி..!
- ‘இப்படி அனுப்பி இந்தியா நம்மள அவமானப்படுத்திருச்சு’!.. முன்னாள் இலங்கை வீரர் சொன்ன பதில்.. கொதித்த இந்திய ரசிகர்கள்..!