Video : நான் 50 அடிச்சதும் 'கோலி' என்கிட்ட ஒரு 'விஷயம்' சொன்னாரு..." அடுத்த செகண்டே அவர் சொன்னத செஞ்சுட்டேன்..." 'இஷான் கிஷான்' பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 18 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக, கேப்டன் விராட் கோலி 73 ரன்களும், இஷான் கிஷான் 56 ரன்களும் எடுத்தனர். தனது அறிமுக போட்டியிலேயே எந்தவித பதட்டமும் இன்றி ஆடி, அரை சதமடித்த இளம் வீரர் இஷான் கிஷானுக்கு, முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு இந்தியாவில் டி 20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால், இஷான் கிஷான் பக்கம் அனைவரின் கண்களும் திரும்பியுள்ளது.

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுடன் தனது அறிமுக போட்டி குறித்து இஷான் கிஷான் உரையாடினார். அப்போது பேசிய அவர், 'எந்தவொரு இளைஞருக்கும், தனது நாட்டுக்காக கிரிக்கெட் ஆடுவது என்பது, பெருமையான தருணமாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.

தொடர்ந்து, கேப்டன் கோலியுடன் பேட்டிங் செய்தது குறித்து பேசிய இஷான் கிஷான், 'நான் ஐம்பது ரன்களை எட்டினேனா என்பதை தெரியாமல் இருந்தேன். அப்போது என்னிடம் பேசிய கோலி, 'சிறந்த இன்னிங்ஸ்' என பாராட்டிய போது தான் நான் அரை சதமடித்ததை உணர்ந்தேன். பொதுவாக, நான் அரை சதமடித்தால் பேட்டை உயர்த்திக் காட்ட மாட்டேன். எப்போதாவது தான் பேட்டை உயர்த்தி, அரை சதத்தைக் கொண்டாடுவேன்.

ஆனால், அப்போது விராட் கோலி என்னிடம் வந்து, 'உனது பேட்டை உயர்த்தி மைதானம் முழுவதையும் சுற்றிக் காட்டு. இது உனது முதல் அரை சதம்' என என்னிடம் அறிவுறுத்தினார். ஒரு நிமிடம் கோலி சொன்னதை ஒரு கட்டளை போல எண்ணி, உடனடியாக நான் பேட்டை உயர்த்திக் காட்டினேன்' என இஷான் கிஷன், சாஹலிடம் தெரிவித்தார்.


இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்