"ஆளையே பார்க்க முடியல?".. ரோஹித் கேள்விக்கு இஷான் கிஷன் சொன்ன பதில்.. எள்ளுவய பூக்கலியே கேப்டன்னு கூட பார்க்கலியே😂..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு சுப்மன் கில், ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இதை செய் .. விக்கெட் விழும்".. கடைசி ஓவரில் ஷர்துல் தாக்கூருக்கு கோலி கொடுத்த ஐடியா.. 'கிங்'-னு சொல்றது இதுக்குதான்..!

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களை ஆடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே முதலாவதாக ஒரு நாள் தொடர் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 208 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன்மூலம் சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. 131 ரன்களில் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ஏழாவது வீரராக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல், போட்டியின் முடிவை மாற்றி எழுதும் வகையில் ஆடி இருந்தார். அடுத்தடுத்து சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் என அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல், 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும் கடைசி ஓவரில் அவருடைய விக்கெட்டை தாக்கூர் காலி செய்தார். இதனால் இந்தியா போட்டியில் வெற்றிபெற்றது.

போட்டி முடிவடைந்த பிறகு சுப்மன் கில், ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்போது ரோஹித் ஷர்மா, "என்னுடைய சார்பிலும் இஷான் சார்பிலும் 200 கிளப்பில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்" என கில்லிடம் கூறினார். அதன் பிறகு அருகில் நின்றிருந்த இஷானிடம்,"என்ன இஷான்,இரட்டை சதம் அடித்த பிறகு 3 மேட்சில் விளையாடவில்லையே ஏன்?" எனக் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த இஷான்,"ப்ரோ, நீங்க தான் கேப்டன்" எனச் சொல்ல ரோஹித்தும் கில்லும் குலுங்கி சிரித்தனர். தொடர்ந்து பேசிய இஷான் இருப்பினும் இந்த போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். பிறகு ரோஹித்,"நம்பர் 4-ல் நீங்கள் விளையாட தயாரா?" என கேட்க, "நிச்சயமாக, எனக்கு விருப்பம் தான்" என இஷான் கூறுகிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இதனிடையே சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | "உங்க வீட்டுக்குள்ள புதையல் இருக்கு".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

CRICKET, ISHAN KISHAN, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்