தோனி கையெழுத்து மேல் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்.. இஷான் கிஷன் சொன்ன வைரல் பதில்.. Trending வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கைநீட்டி கத்தாதீங்க, உங்க வேலைக்காரி இல்ல நான்".. நடுவானில் நடந்த சண்டை.. ஆவேசமான விமான பணிப்பெண்!!

இதில் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பமாகி உள்ளது.

இதில் வங்காளதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதி இருந்தது. இதன் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றிய வங்காளதேச அணி, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.

ஆனால், இரு ஆணிகளுக்கும் இடையே நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 409 ரன்கள் எடுத்ததுடன் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றிருந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன், தனது முதல் சதத்தை ஒரு நாள் போட்டியில் அடித்ததுடன் அதனை 200 ரன்களாகவும் மாற்றி சாதனை படைத்திருந்தார்.

வேகமாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த இஷான் கிஷன், சச்சின், சேவாக், ரோஹித் ஷர்மா (2 முறை) ஆகியோருக்கு பிறகு இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த சாதனைக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ரஞ்சி தொடரில் விளையாடவும் இஷான் கிஷன் வந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர் ஒருவர் முயன்ற சமயத்தில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரசிகர் ஒருவர் இஷான் கிஷனிடம் தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டார். அதில் ஏற்கனவே, தோனியின் கையெழுத்தும் இருந்துள்ளது. அதனால் இஷான் கிஷன் கையெழுத்து போடாமல் இருக்க, தோனியின் கையெழுத்தில் மேலே இருக்கும் இடத்தில் இஷானை கையெழுத்து போடுமாறு ரசிகர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், தோனி மீதான மரியாதை காரணமாக அவர் கையெழுத்து மீது தன்னால் கையெழுத்து போட முடியாது என்றும் இஷான் கிஷன் கூறி உள்ளார்.

மேலும் வேறு இடத்தில் கையெழுத்து போடுகிறேன் என்றும்., தோனி கையெழுத்து மேல் போடும் அளவிற்கு நான் வளரவில்லை என்றும் கூறிய இஷான் கிஷன், போனின் பின்புறம் கீழே இருந்த இடத்தில் இறுதியில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இஷான் கிஷனின் இந்த செயல், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

 

Also Read | ஐபிஎல் ஏலத்துக்காக CSK போட்டு வெச்ச பிளான்?.. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரெட்?.. இவங்க தான் டார்கெட்டா?"

CRICKET, ISHAN KISHAN, MS DHONI, MS DHONI AUTOGRAPH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்