VIDEO: என்னங்க நெட் பிராக்டீஸ்லையே இப்படி பொளக்குறாரு.. மிரண்டுபோய் பார்த்த இஷான், ஸ்ரேயாஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வலைப்பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடியதை இளம்வீரர்கள் வியந்து பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: என்னங்க நெட் பிராக்டீஸ்லையே இப்படி பொளக்குறாரு.. மிரண்டுபோய் பார்த்த இஷான், ஸ்ரேயாஸ்..!
Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடரின் முதல் போட்டியே இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Ishan Kishan and Shreyas mesmerised by Kohli's batting in nets

இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒருவேளை நியூஸிலாந்துக்கு எதிரான இந்தியா தோல்வியை தழுவினால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.

அதனால் இந்திய வீரர்கள் தினமும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) தீவிரமாக வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று வலைப்பயிற்சியில் விராட் கோலி அதிரடியாக விளையாடியதை இஷான் கிஷன் (Ishan Kishan) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) வியந்து பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்