‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, இரண்டு மாத விடுப்பில் இந்திய ராணுவத்தில் பணியாற்ற சென்றார். அதனால் அப்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி விளையாடவில்லை. இதனால் தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை.

இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். உடனே தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என தகவல் பரவ ஆரம்பித்தது. உடனே தோனியின் மனைவி ஷாக்சி இது வதந்தி என கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது தோனி மேலும் இரண்டு மாதம் ஓய்வை நீட்டித்துள்ளதாகவும், நவம்பர் மாதம் வரை போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தோனிக்கு ஐபிஎல் போட்டியின் போது முதுகு பகுதியிலும், உலகக் கோப்பைத் தொடரின் போது கையிலும் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை எனவும், அதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

MSDHONI, TEAMINDIA, INJURY, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்