"கான்வே வேண்டாம்.. பேசாம ஓப்பனிங் இவரை இறக்கி விடுங்க".. CSK அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக யாரை களமிறக்கலாம் என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்னும் சில தினங்களில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதில் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக யார் விளையாடுவது என சிஎஸ்கே அணியில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘டு பிளிசிஸ் பதிலாக சிஎஸ்கே அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள டெவோன் கான்வே சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகள் மும்பை வான்கடே, புனே ஆகிய மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்த மைதானங்களில் ஆடுவதற்கு டெவோன் கான்வேவை காட்டிலும் ராபின் உத்தப்பாவே சிறந்தவர்.
உத்தப்பா மிகச்சிறந்த தொடக்க வீரர். டெவோன் கான்வேவை களமிறக்காமல் உத்தப்பாவை ஓபனிங்கில் இறக்கிவிட்டால், இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்ஷனாவை விளையாட வைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம் மில்னே, மொயின் அலி மற்றும் பிராவோ ஆகிய மூவரும் கண்டிப்பாக ஆடுவார்கள் என்றே நினைக்கிறேன். டெவோன் கான்வே அணிக்கு தேவைப்படவில்லை என்றால், மஹீஷ் தீக்ஷனாவை நான்காவது வெளிநாட்டு வீரராக ஆடவைக்க முடியும்’ என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவர் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி".. நெகிழ்ச்சியில் ரிஷப் பண்ட் சொன்ன வார்த்தை... பின்னணி என்ன?
- "திரும்ப வந்துட்டாருங்க அவரு.." ஐபிஎல் தொடரில் மீண்டும் வரும் ரெய்னா.. சென்னை மேட்ச் நடக்குறப்போ சும்மா களை கட்டப் போகுது..
- "கொஞ்ச நாள் முன்னாடி கோலி கிட்ட பேசுனேன்.. அப்போ அவர் சொன்ன ஒரு விஷயம்".. சீக்ரெட்டை உடைத்த இர்ஃபான்..!
- லக்னோ அணிக்காக இளம் வீரரை தட்டித்தூக்க தீவிரம் காட்டும் கம்பீர்.. கசிந்த தகவல்..!
- விசா விவகாரம்.. மொயின் அலி எப்போ இந்தியா வருவார்..? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்..!
- அவங்க இல்லான்னா என்ன.. 3 தரமான ப்ளேயர்ஸை குறைஞ்ச ரேட்டுக்கு எடுத்திருக்கோம்.. சிஎஸ்கே கோச் சொன்ன சூப்பர் தகவல்..!
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?
- IPL 2022 : வாவ்… செம்ம ஹேண்ட்ஸம் லுக்கில் கிங் கோலி.. RCB வெளியிட்ட வைரல் Pic!
- IPL 2022: எங்க டீம்ல 11 பேர் இல்ல 12 பேர்… செம்மயான அறிவிப்பை வெளியிட்ட RCB
- மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் திருமண புகைப்படம்