“அந்த ப்ளேயருக்கு ஹெல்ப் பண்ண ஒருத்தரும் இல்ல”.. MI அணியின் வீக்னஸ்.. இர்பான் பதான் பரபரப்பு கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை அணி குறித்து இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் 9-வது இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் மும்பை அணிக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் அடுத்த சில ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது தனி ஒருவனாக அணியை தாங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 68 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை மும்பை அணி எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன்பின் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை அணி, அதன்பின் நடந்த 10 போட்டிகளில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்தது. மேலும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மும்பை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இதுபோன்ற கடினமான தருணங்களில் இருந்து மீண்டெழுவது எப்படி என மும்பை அணிக்கு நன்றாக தெரியும். கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இதேபோல அந்த அணி மீண்டு வந்துள்ளது. அதிலும் 2015-ம் ஆண்டு இதுபோன்ற சூழ்நிலையில் தவித்து, பின் எழுச்சி கண்டு கோப்பையை வென்றது. ஆனால் அந்த மும்பை அணி சற்று வித்தியாசமாக இருந்தது.
தற்போது அபாரமாக செயல்படும் இளம் வீரர் திலக் வர்னா, சூர்யகுமார் யாதவ், டாப் ஆர்டரில் இஷான் கிஷன் ஆகியோரால் மும்பை அணியின் பேட்டிங் இப்போதும் நன்றாக உள்ளது. இனி வரும் போட்டிகளில் பொல்லார்ட் மற்றும் ரோகித் சர்மா கண்டிப்பாக ரன்கள் அடிப்பார்கள். ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு மோசமாக உள்ளது. பும்ராவுக்கு துணையாக யாரும் இல்லை. மகாராஷ்டிராவில் உள்ள மைதானங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினால் சிறப்பாக பந்து வீச முடியும்’ என இர்பான் பதான் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னங்க நடக்குது இங்க??.." கடுப்பாகி நடுவரிடம் கத்திய ரிக்கி பாண்டிங்.. KKR vs DC மேட்ச் நடுவே நடந்த பரபரப்பு
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?
- "என்ன?, சச்சின் 3-வது நடுவரா??”.. ஒரு நிமிஷம் குழம்பிய ரசிகர்கள்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
- "சிஎஸ்கே அணிக்காக ஆடுங்க ப்ளீஸ்.." ரசிகர் வைத்த கோரிக்கை.. "என்ன மன்னிச்சுடுங்க.." அமித் மிஸ்ரா சொன்ன பதில்
- மேட்ச் தோத்தும் பஞ்சாப் கேப்டன் செய்த 'விஷயம்'.. "நீ தான் யா பெஸ்ட் கேப்டன்".. உருகி போன ரசிகர்கள்
- "ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!
- ரோஹித்தை சீண்டிய சேவாக்?.. ஒரே ஒரு ட்வீட்டால் கொதித்த MI ரசிகர்கள்.. "உண்மை'ல என்ன தாங்க நடந்துச்சு?"
- "கையெழுத்து போடுங்க, இல்லன்னா.." 'CSK' உத்தப்பாவுக்கு MI வைத்த செக்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபரப்பு தகவல்
- “அவர் இப்படி அடிப்பார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல”.. தொடர் தோல்வி.. நொந்துபோய் ரோகித் சர்மா சொன்ன பதில்..!
- "ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..