"CSK-ல இருந்தப்போ இப்டி தான் நடத்துனாங்க".. இரண்டே வாரத்தில் கிளம்பிய அயர்லாந்து வீரர்.. அவரே சொன்ன பரபரப்பு தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சுற்றியுள்ள பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (23.12.2022) ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய போகிறது என்பதை அறியவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | உச்சக்கட்ட வறுமை.. மகனின் ஆசிரியையிடம் 500 ரூபாய் கடன் கேட்ட தாய்.. இரண்டே நாளில் நடந்த அற்புதம்!!

2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.

இதில், அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ்வா லிட்டில் என்பவரும் இடம்பெற்றுள்ளார். சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் ஜோஷ்வா அதிக எதிர்பார்ப்பை மினி ஏலத்தில் ஏற்படுத்துவார் என்றும் கிரிக்கெட் பிரபலங்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த போது நடந்த சம்பவம் தொடர்பாக அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில் தெரிவித்துள்ள கருத்து, அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தவர் ஜோஷ்வா லிட்டில். ஆனால், இரண்டு வாரங்கள் மட்டுமே சென்னை அணியுடன் இருந்து பின் விலகிய ஜோஷ்வா, இது பற்றி பேசுகையில், "நான் நெட் பவுலர் என்றும் யாராவது காயமடைந்தால் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் என்னிடம் கூறினார்கள். ஆனால், பயிற்சியின் போது கூட அதிக நேரம் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அநேகமாக 2 ஓவர்கள் வரை வீசி இருப்பேன்.

அதே சமயம் நான் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதை புரிந்து கொண்டு சரியான கண்ணோட்டத்தில் அவர்கள் என்னை பார்க்கவில்லை என நான் கருதுகிறேன். அதே போல, பயிற்சியின் போது ஒரு வீரர் சோர்வடைந்த போது என்னை பந்து வீச சொன்னதும் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை உணர்ந்து இரண்டு வாரங்களில் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதனால் இந்த முறை ஏலத்தில் அவர்கள் என்னை எடுக்கமாட்டார்கள்" என ஜோஷ்வா லிட்டில் கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "டிராவிட் தான் கேப்டன், ஆனா தோனிகிட்ட தான் ஐடியா கேப்பேன்".. சச்சின் உடைத்த சீக்ரெட்.. அப்பவே அப்படியா?

CRICKET, IRELAND PLAYER, JOSHUA, JOSHUA LITTLE, CSK TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்