எவ்ளோ சொல்லியும் ‘கேட்காம’ ஓடி வந்த ரோஹித்.. வேற வழியில்லாம சூர்யகுமார் எடுத்த முடிவு.. மேட்ச்சை பரபரப்பாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ஸ்டோனிஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து வந்த ரஹானே 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்தாக களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (65) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் (56), ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை டெல்லி அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்தது.

இந்தநிலையில் இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்காக தனது விக்கெட்டை சூர்யகுமார் யாதவ் விட்டுக்கொடுத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. 48 ரன்கள் அடித்திருந்தபோது அஸ்வின் வீசிய ஓவரில் சிங்கிள் எடுக்க ரோஹித் ஷர்மா ஓடினார். ஆனால் பந்தை டெல்லி வீரர் ப்ரவீன் தூபே பிடித்துவிட்டார். இதைப் பார்த்த சூர்யகுமார், ரோஹித் ஷர்மாவிடம் ஓட வேண்டாம் என கத்தினார். ஆனால் இதை கவனிக்காத ரோஹித் வேகமாக ஓடி எதிர்முனைக்கு வந்துட்டார்.

உடனே ப்ரவீன் தூபே பந்தை விக்கெட் கீப்பரிடம் வீசினார். இதனை பார்த்த சூர்யகுமார் உடனே மிடில் கிரவுண்டுக்கு ஓடி தன்னை அவுட்டாக்கிக் கொண்டார். கேப்டனுக்காக தன்னுடைய விக்கெட்டை விட்டுக்கொடுத்த சூர்யகுமாரை சுயநலமில்லாத வீரர் என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போட்டி முடிந்த பின் பேசிய ரோஹித் ஷர்மா, ‘சூர்யா மிகவும் முதிர்ச்சியடைந்த வீரர். அவர் சிறந்த ஃபார்மில் இருந்தார். நான் சூர்யாவுக்காக எனது விக்கெட்டை தியாகம் செய்திருக்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்