‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’!.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங்கின் அடிப்படை விலையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க கடந்த வாரம் 1097 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ஏலத்துக்கான இறுதிப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது . அதில் பதிவுசெய்த 1097 பேரில் 292 பேரை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.

ஸ்பாட் ஃபிக்ஸிங் பிரச்னையில் சிக்கி, தடைவிதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுவந்த ஶ்ரீசாந்த், சமீபத்தில் நடந்த சையது முஸ்தாக் டிராஃபியில் விளையாடி இருந்தார். இதனை அடுத்து ஐபிஎல் ஏலத்திலும் தனது பெயரை ஸ்ரீசாந்த் பதிவு செய்திருந்தார். ஆனால் அவரின் பெயர் பிசிசிஐ அறிவித்துள்ள இறுதிப்பட்டியலில் இல்லை.

அதேப்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய்யின் பெயரும் இறுதிப்பட்டியலில் இல்லை. மேலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீகில் ஜாஃப்னா அணிக்காக விளையாடிய ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் பெயர் ஐபிஎல் ஏலத்துக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. வலது கை லெக்ஸ்பின்னரான விஜயகாந்த்தின் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில் சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாட்டின் 8 வீரர்கள் ஐபிஎல் ஏல இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில் ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த் மணிமாறன், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், மொகமது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடி என பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச நிர்ணய விலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்