“விடிஞ்சு எழுந்தா.. CSK அணியில் இப்படி ஒன்னு நடந்துருக்கு?”... திருப்பங்கள் நிறைந்த அடுத்த கட்ட பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மீண்டும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், சென்னை அணி, சுரேஷ் ரெய்னாவின் பெயரை அணி வீரர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. பின்னர்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.  இந்நிலையில் சென்னை அணியின் தொடர் தோல்விக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் இல்லாதது ஒரு காரணம் என பேச்சுகள் எழுந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப வேண்டும் என  கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருக்கும் அணியில் பெயர் பட்டியலில் இருந்து சுரேஷ் ரெய்னாவின் பெயரை மட்டுமல்லாமல் இந்த தொடரில் இருந்து தானாக விலகிய ஹர்பஜன் சிங்கின் பெயரையும் சேர்த்து சென்னை அணி நீக்கியுள்ளதாக தெரிகிறது.

சென்னை அணியில் நடந்துள்ள இந்த மாறுபாட்டின் மூலம், சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் விளையாடுவதற்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.  சென்னை அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதனும் இந்த முறை சுரேஷ் ரெய்னா விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்