“ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா?”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு!”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்!”.. பயிற்சியாளர் பிளமிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு நன்றாக விளையாடுவார் என்று நம்பிதான், ஜடேஜா மற்றும் பிராவோவுக்கு முன்னதாகவே கேதார் ஜாதவை களமிறக்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
அபுதாபியில் நடந்த நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 168 எனும் இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோற்றது. இந்த் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் இறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்களே எடுத்தார். என்னதான் தோல்விக்கு மற்ற பேட்ஸ்மேன்களும் காரணமாக இருந்தாலும், ரன்கள் தேவைப்பட்ட இடத்தில் ஷாட்களை ஜாதவ் அடித்து ஆடாததால், ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஜாதவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், “சுழற்பந்துவீச்சை திறமையாகக் கையாண்டு கேதார் ஜாதவ் நன்றாக விளையாடக் கூடியவர் என்பதால்தான், ஜடேஜா மற்றும் பிராவோவுக்கு முன்பாக ஜாதவை களமிறக்கினோம். அதன் பின் ஜடேஜா களமிறங்கி ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் கடுமையாகப் முயற்சித்தும் போதுமான ரன்கள் இல்லாததால் தோல்வி அடைந்தோம்.
அம்பதி ராயுடு,வாட்ஸன் ஆட்டமிழந்தது, 11-வது ஓவர் முதல் 14-வது ஓவர் வரை 14 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே சேர்த்தது உள்ளிட்டவற்றால் பேட்டிங்கை குறை கூறமுடியாது. பார்ட்னர்ஷிப்பில் ஆடியவர்கள் யாரேனும் 75 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலே, அடுத்த 5 ஓவர்களுக்கும் அப்படி பாட்னர்ஷிப் அமைத்திருக்கும், ஆட்டமும் வேறு திசையில் பயணித்திருக்கும்.
கொல்கத்தா அணியினர் கொடுத்த தொடர் அழுத்தம் முக்கியக் காரணம். ரெய்னா இல்லை என்பதற்காக பேட்டிங் வலுவிழந்ததாக கூற முடியாது. நல்ல பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆதலால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என நான் கருதவில்லை. கேதார் ஜாதவ் நன்கு அடித்து ஆட பந்துகள் நிறையவே இருந்தன. ஆனால் பலனளிக்கவில்லை. ஜடேஜாவுக்கு ஓவர் வழங்காதது பற்றி தோனியிடம்தான் கேட்கவேண்டும். களத்தில் தோனிதான் முடிவு எடுப்பார்” இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "திரும்ப வந்து ஜெயிக்குறப்போ... அடிக்குற 'அடி' வேற மாதிரி இருக்கும்..." 'தோல்வி'க்கு பின் வைரலான 'ட்வீட்'!!!
- ‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..!
- ‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’!.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..!
- ‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..? சரமாரியாக ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்..!
- Watch: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..! ‘செம’ வைரல்..!
- ஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..!
- Watch: ‘யாரு சாமி நீங்க’!.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரியும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..!
- 5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..?
- "என்னது, அவரா...??? சீசனிலிருந்தே விலகுகிறாரா???" எதிர்பார்ப்பை கிளப்பிய பிரபல வீரர்... IPL-லிருந்து திடீர் விலகல்!!!
- அவர் உள்ளே, இவர் வெளியே.. சிஎஸ்கே ‘ப்ளேயிங் லெவனில்’ ஒரு மாற்றம்..! யாருன்னு தெரியுமா..?