அவரு ‘ஃபார்ம்ல’ இல்லைன்னு தான் உங்கள டீம்ல எடுத்தாங்க.. நீங்களும் இப்டி ‘ஏமாத்திட்டீங்களே’.. இளம்வீரரை ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் 20-வது லீக் போட்டி இன்று (06.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 18.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். முன்னணி வீரர்களான கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (6), சஞ்சு சாம்சன் (0) போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். மேலும் இப்போட்டியில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், வேகப்பந்து வீச்சாளர் போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 2ம் பந்தில் அவுட்டானார்.

இப்போட்டியில் ராபின் உத்தப்பாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடினார். உத்தப்பா இந்த ஐபிஎல் தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் ஃபார்மில் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக 19-வயதான இளம் வீரர் ஜெய்ஸ்வால் இப்போட்டியில் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றவர். அதனால் ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முன்னதாக நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் மட்டுமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்