சிஎஸ்கேவின் கடைசி ‘பிரம்மாஸ்திரம்’.. அப்போ இன்னைக்கு அவர பாக்கலாமா..? எகிறும் எதிர்பார்ப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி இன்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.

சென்னை அணியை பொருத்தவரை மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சொதப்புவதால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் கூட தோல்வியை தழுவியது. அதேபோல் பந்து வீச்சிலும் சென்னை அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என சிஎஸ்கே-வின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருந்தார்.

அதில், நாங்கள் எப்போதும் ஸ்பின் பவுலிங்கை நம்பிதான் களமிறங்குவோம். அவர்கள் எங்களுக்கு எப்போது விக்கெட் எடுப்பார்கள். ஆனால் இந்த சீசனில் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங்கை பலன் அளிக்கவில்லை என பிளமிங் தெரிவித்துள்ளார். அதேபோல் சிஎஸ்கே-வின் தோல்விக்கு காரணம் அணியில் உள்ள வீரர்களின் வயதும் ஒரு காரணமென அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும்தான் இக்கட்டான நேரங்களில் விக்கெட் எடுத்தனர். இதனை அடுத்து 2018 சீசனுக்கு பிறகு இம்ரான் தாகீர், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் அந்த பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டனர். கடந்த 2019 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர் இம்ரான் தாகீர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வருட சீசனில் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையார வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் இன்றைய போட்டியில் இம்ரான் தாகீர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதூ. சென்னை அணி சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இம்ரான் தாகீர் அணிக்குள் வந்தால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து, எதிரணியை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த முடியும்.

ஏற்கனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. தற்போது ஐபிஎல் சீசனின் பாதி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இம்ரான் தாகீர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோவை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்