“அந்த 3 மேட்ச்லயும் இத பண்ணியிருக்கணும்!”.. “மனுசய்ங்க 2 பேரும் ஹிட்டர்களாக மாறி”.. வெற்றிக்கு பின் ‘தோனி’ சொன்னது இதுதான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணி மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய ஐபிஎல் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 178 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வென்றது. இதில் வாட்ஸன் 83, டூப்பிளசிஸ் 87 ரன்களுடன் இறுதிவரை அதிரடியாக ஆட்டமிழக்காமல் ஆடி, அணியின் வெற்றிக்கு பக்கபலமாக நின்றார்.

இத பின் உற்சாகமாக பேட்டியளித்த தோனி, “சின்ன விஷயங்களை நேர்த்தியாக பண்ணியிருக்கோம்னு நினைக்கிறேன். இந்த வெற்றி முக்கியமானது. இப்படியான 'நெருப்பான' தொடக்கம்தான் எங்களோட தேவையாக இருந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இப்படியான தொடக்கத்தையும் வெற்றிகளையும் பார்க்கலாம். சூழலுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து வாட்ஸன் சிறப்பாக ஆடினார். இதேபோல் ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை ஆடும் டூப்பிளசிஸ் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். எதிரணியின் பந்துவீச்சாளர்களை குழப்பி நன்றாக ஆடுவார். இருவரும் சேர்ந்து தங்களது அதிரடியான ஆட்டங்களால் இந்த ஆட்டத்தை நிரப்பியுள்ளனர். தக்க தருணத்தில் ஹிட்டர்களாக ஆடினர்.

எங்கள் அணித் தேர்வுக்கு தலைமைப்பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்பிங்கிற்குதான் நன்றி. எங்களுக்குள் திட்டங்களின்போது விவாதங்கள் கிடையாது. ஒரே திட்டமிடுதல்தான் எங்களது உறவுக்குக் காரணம். கடைசி 3 போட்டிகளில், எதிரணி ரன்களை கட்டுப்படுத்தி,  பல நெருக்கடிகளை அளித்திருக்க வேண்டும். அதை செய்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டோம்” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்