“தலனு ஒருத்தர் தான் இருக்கார்.. அவர் யார்னு எல்லாருக்கும் தெரியும்!” - 'விறுவிறுப்பாக ஜெயித்த' ஐபிஎல் அணியின் கேப்டன் புகழாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்தில் மோசமாக செயல்ட்ட மும்பை அணியின் பேட்டிங் வரிசை பின்னர் உயர்ந்தது.  டி காக், 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் எடுத்த மும்பை அணியில் நாதன் கோல்டர் நைல் 12 பந்துகளில் 24 ரன்களும், பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்களும் சேர்த்ததால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து ஆடிய பஞ்சாப் அணி சளைக்காமல், தொடங்கியது. அந்த அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து விளாசினார். இதன் மூலம் தொடர்ந்து 2018,2019,2020 ஆகிய ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்த வீரர் என கோலி முதலானோர் வரிசையில் கே.எல்.ராகுல் இணைந்தார்.

இந்நிலையில், அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், கே.எல்.ராகுலை ‘தல’ என்று குறிப்பிட்டு தன் வாழ்த்தை தெரிவித்தபோது,  ‘தல’ என்று ஒரே ஒருவர்தான் இருக்கிறார். அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று மறைமுகமாக தோனியை குறிப்பிட்டுள்ளார் கே.எல்.ராகுல். இதனால் சென்னை ரசிகர்கள் குஷி ஆகியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்