‘முதல் போட்டி’.. முதல் ஓவரிலேயே ‘பெரிய’ விக்கெட்.. மும்பையை ‘மிரள’ வைத்த 19-வயது இளம்புயல்.. யாருன்னு தெரியுதா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி இன்று (06.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர்.

இப்போட்டியில் மும்பை அணியில் மாற்றம் எதுமில்லை. ராஜஸ்தான் அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். யாஷ்வி ஜேஸ்வால், அன்கிட் ராஜ்பூட் மற்றும் கார்த்திக் தியாகி ஆகிய இளம்வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் யாஷ்வி ஜேஸ்வால் (19 வயது) மற்றும் கார்த்திக் தியாகி (19 வயது) ஆகிய இரண்டு வீரர்களும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கார்த்திக் தியாகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 6 இன்னிங்ஸ்ஸில் 11 விக்கெட் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டுக்கு பதிலாக கார்த்திக் தியாகி அணியில் எடுக்கப்பட்டுள்ளார். உனத்கட்டை இந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. ஆனால் உனத்கட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் அவருக்கு பதிலாக 19 வயதான இளம்வீரர் கார்த்திக் தியாகி இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே மும்பை வீரர் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்