“அவரு சிக்ஸ் அடிச்சா எந்த மைதானமா இருந்தாலும்..”.. ‘கேப்டனிடம்’ இருந்து வந்த இப்படி ஒரு பாராட்டு மழை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஷார்ஜாவின் குட்டி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 9வது போட்டியில் 223 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி அதிக ஸ்கோர் விரட்டலுக்கான ஐபிஎல் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படைத்தது.

இதில் 45 பந்துகளில் சதம் அடித்துள்ளார். மொத்தம் 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் ஐபிஎல் வரலாற்றில் 2வது விரைவு சதம் அடித்து, யூசுப் பதானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஒரு கட்டத்தில் 224 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 எடுக்க, மீண்டும் காட்டடி அடித்த சஞ்சு, 4 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க, ராகுல் திவேஷியா, மே.இ.பவுலர் காட்ரெலை ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி, 7 சிக்சர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த அசாத்திய விரட்டல் குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “பனிப்பொழிவால், 10 ஓவர்கள் முடிவில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதினோம். ஆனால் ஏகப்பட்ட சிக்சர்கள் இங்கே, சஞ்சு சாம்சன் அனைவரின் அழுத்தத்தையும் சேர்த்து, மைதானம் முழுக்க பந்துகளை விரட்டிய்யுள்ளார். சஞ்சுவின் ஷாட்கள் எல்லாம் எந்த மைதானமாக இருந்தாலும் வெளியில் போயிருக்கும். இதேபோல் டைம் அவுட்டில் திவேஷியா என்னிடம் வெற்றி நம்பிக்கை அளித்தார். மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர் 2 சிக்சர்கள். அதே சமயம் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். இல்லையெனில் 250 ரன்களை விரட்டியிருக்க முடியும்” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்