Watch: ‘140 கிமீ’ வேகத்துல வந்த பந்து.. நெஞ்சுல அடிச்சு ‘சுருண்டு’ விழுந்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவாதியாவின் நெஞ்சில் பந்து பலமாக அடித்து சுருண்டு விழுந்தார்.

ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக லாம்ரோர் 47 ரன்களும், ராகுல் திவாதியா 24 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. விராட் கோலி (72) மற்றும் தேவ்தத் பட்டிக்கல் (63) அதிரடியால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸின் கடைசி ஓவரை நவ்தீப் சைனி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ராகுல் திவாதியா அடிக்க முயன்றார். ஆனால் 140 கிமீ வேகத்தில் வந்த பந்தை சரியாக கணிக்க தவறியதால் ராகுல் திவாதியாவின் நெஞ்சில் பலமாக விழுந்தது. இதனால் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து எதிர்கொண்ட 2 பந்துகளும் தொடர்ந்து சிக்ஸர் அடித்து ராகுல் திவாதியா அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்