“அஸ்திவாரத்தை சாய்க்குறதுக்கு ப்ளான் பி?”.. ‘பழைய பகைக்கு பதிலடி கொடுக்கும் வியூகமா?’.. ‘பரபரப்பு’ களத்தில் 'ஐபிஎல்' ஃபைனல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணி - டெல்லி அணிகள் மோதும் ஐபிஎல் இறுதி போட்டி, டெல்லி அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டெல்லி அணி பயிற்சியாளர் பாண்டிங்கிற்கு இது முக்கியமான போட்டி. முதல் முறையாக பைனல்ஸ் சென்ற டெல்லி அணி எப்படியாவது மும்பையை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறது. இளம் வீரர்களை வைத்து எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று பாண்டிங் நினைக்கிறார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 2013 வரை இருந்த பாண்டிங். ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சியை கொடுத்துவிட்டு பயிற்சியாளர் ஆனார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பாண்டிங் தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் சரியாக மதிக்கப் படாததால் வெளியேறினார் என்றும் கருதப்படுகிறது.  

இதன் காரணமாகவும், மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும் என்பதாலும், ரிக்கி பாண்டிங் இன்று கூடுதல் பேட்ஸ்மேன்களை களமிறக்குவார் என்றும், ரோஹித் சர்மாவின் வலுவான அணியை சாய்க்க, டெல்லி அணியில் ஸ்டோய்னிஸ், தவான், ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட், அஸ்வின், ரபாடா, அக்சர் பட்டேல், அன்ரிச் நோர்ட்ச் ஆகியோருடன் ரஹானே, பிரித்வி ஷா ஆகியோரும் களமிறக்கப்படுவதாக தெரிகிறது.

இதற்கு முக்கியக் கார்ணம், ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பையை வீழ்த்தினால், அது டெல்லியின் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும்,  தன்னுடைய பயிற்சியாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்றும் பாண்டிங் உறுதியாக இருப்பதுதான் என தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்