'9 வருட' பந்தம் முடிவுக்கு வந்தது.. ராஜஸ்தானை விட்டு 'வெளியேறிய' ரஹானே.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான ரஹானேவை டெல்லி அணி விலைக்கு வாங்கியுள்ளது. இதன் வழியாக அந்த அணியுடனான 9 வருட பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ரஹானே மும்பை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு வந்தார். அதில் இருந்து அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். 2016-2017 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி தடை செய்யப்பட்டது. மீண்டும் 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் விளையாடியபோது ரஹானே தலைமை வகித்தார்.
அந்த ஆண்டு பிளே ஆப்புக்கு ராஜஸ்தான் முன்னேறியது. ஆனால் 2019-ம் ஆண்டு ரஹானே தலைமையில் அந்த அணி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ஸ்மித்தை அணியின் கேப்டனாக ராஜஸ்தான் நியமனம் செய்தது. என்றாலும் பிளே ஆப்புக்கு அந்த அணி முன்னேறவில்லை.
இந்தநிலையில் இந்த வருடம் ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களை பிற அணிகளுக்கு விற்பனை செய்தும், அவர்களிடம் இருந்து வாங்கியும் வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் தன்னுடைய அணியில் இருந்து ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு விற்பனை செய்துள்ளது.
அங்கித் ராஜ்புத்தை பஞ்சாப் அணியிடம் இருந்து வாங்கியுள்ளது. இதன் மூலம் ரஹானேக்கு ராஜஸ்தான் அணியுடனான 9 வருட பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. கேப்டன் விவகாரத்தில் ஏற்பட்ட உரசல்கள் தான் இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அஸ்வினைத் தொடர்ந்து 'பிரபல' அணியின்.. முன்னாள் 'கேப்டனை'யும் வளைத்துப்போட்ட டெல்லி!
- மத்த டீமெல்லாம் 'சட்டுன்னு' தூக்கிட்டாங்க ?.. 'பட்டுன்னு' பதில் சொன்ன சிஎஸ்கே!
- 'தாராளமா' எடுத்துக்கங்க.. பிரபல வீரர்களை திடீரென 'கழட்டி' விட்ட அணிகள்.. பரபரக்கும் ஐபிஎல்!
- 'நெருங்கும் ஏலம்'...'இந்த 4 பேரையும் கழற்றி விடலாம்'...புதிய திட்டத்தில் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'?
- ஏகப்பட்ட 'ரிஸ்க்'.. எக்கச்சக்க 'அமவுண்ட்'.. அஸ்வினை வாங்கியது ஏன்?.. 'உடைந்த' ரகசியம்!
- 'மிகப்பெரும்' தொகை.. இளம் 'வீரரை' விட்டுக்கொடுத்து.. 'அஸ்வினை' வாங்கிய அணி.. என்ன காரணம் ?
- ‘ரசிகர்கள் ஆர்வம் காட்டல’.. ‘வீண் செலவுதான் ஆகுது’.. இனி ஐபிஎல் போட்டியில் இது நடக்காதா..?
- 'அஸ்வினை' தாறோம்.. அந்த 'ரெண்டு பேரையும்' அனுப்பி வைங்க.. முட்டி 'மோதிக்கொண்ட' அணிகள்!
- 'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்!
- 'ஐபிஎல்லில் வரும் அதிரடி மாற்றம்'... 'இனி இதுக்கு மட்டும் தனி அம்பயர்'... விவரம் உள்ளே!