"தத்தளித்து கொண்டிருந்த அணி!".. கடைசி 4 ஓவரில் ‘பொளந்து கட்டிய பொல்லார்டு!’.. அவருடன் சேர்ந்து தெறிக்க விட்ட வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆடி 176 ரன்கள் குவித்திருந்தது.
டாஸ் வென்ற மும்பை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்கத்தில் பேட்டிங் வரிசை மோசமாக செயல்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். டி காக், தன் சிறந்த பார்மை மீண்டும் வெளிப்படுத்தி 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக சாதாரண வேகத்தில் தான் ரன் குவித்த மும்பை அணி, கடைசி 4 ஓவர்களில், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் போட்டியை புரட்டி போட்டது. அவருடன் எதிர்பாராத ஆல் - ரவுண்டர் ஒருவர் இணைந்ததுதான் மேட்ச் இன்னும் சிறப்பாக மாறியதற்கு காரணம்.
பின்னர் மும்பை அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணியில் அப்போது பொல்லார்டு களத்தில் இருந்தார். அவரது விக்கெட் பறி போனால் மும்பை அணி பாதாளத்தை அடையும் என்ற நிலை இருந்தது. அப்போது அவர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருடன் இணைந்த அந்த கரம் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் தான். அவர் 12 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
மொத்தமாக பொல்லார்டு - நாதன் கோல்டர் நைல் ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்து தத்தளித்த மும்பை அணி, அதில் இருந்து மீண்டு பெரிய ஸ்கோரை அடித்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'CSK ரசிகர்கள்... இத்தன நாளா எதிர்பார்த்து காத்திருந்தது'... 'அடுத்த மேட்ச்சிலேயே நடக்கலாம்!!!'... 'அணியில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு!'...
- "அவர அடிச்சு ஆட சொல்லுங்க... இல்ல ஆர்டர மாத்துங்க"... 'சாம்பியன் அணியை கழுவி ஊற்றிய பிரபல வீரர்!'...
- 'இத்தன இக்கட்டிலும் பிளே ஆப் செல்ல'... 'மீதமுள்ள ஒரே நம்பிக்கை'... 'ஆனா, இதுமட்டும் நடந்துடக்கூடாது'... 'கலக்கத்தில் CSK ரசிகர்கள்!'...
- "எல்லாமே நல்லா தான் போயிட்டிருந்தது... திடீர்னு அவர தூக்கியிருக்கக் கூடாது?!!" - 'கடும் அழுத்தத்திற்கு உள்ளான பிரபல தமிழக வீரர்'... 'கொந்தளித்த முன்னாள் கிரிக்கெட்டர்!!!'
- "இருக்கற பிரச்சன பத்தாதுன்னு இதுவேறயா?!!..." - 'CSKவுக்கு வந்துள்ள அடுத்த சிக்கல்'... 'பயிற்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!!'...
- Video: பல வருச ‘வலி’.. தோனி செஞ்சதை அப்படியே ‘திருப்பி’ செஞ்ச அக்சர்.. 4 வருசத்துக்கு அப்றம் நடந்த ‘மிராக்கிள்’..!
- சிஎஸ்கே தோற்க ‘ஒரே காரணம்’ இதுதான்..? லட்டு மாதிரி கெடச்ச 4 வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே..!
- கடைசி ஓவர போட ஏன் ‘பிராவோ’ வரல..? என்ன ஆச்சு அவருக்கு..? தோல்விக்கு பின் ‘தோனி’ சொன்ன விளக்கம்..!
- Video: ரன் எடுக்குற ‘அவசரத்துல’ அவரு நின்னத கவனிக்கல.. ‘நெஞ்சில’ அடிச்சு கீழே விழுந்த வீரர்..!
- அவர்கிட்ட அப்டி ‘என்ன தான்’ இருக்கு.. அந்த இளம்வீரருக்கு ‘சான்ஸ்’ கொடுத்திருக்கலாமே.. கொதிக்கும் ரசிகர்கள்..!