இந்த மாதிரி ‘அதிசயம்’ எல்லாம் இவர் ஒருத்தராலதான் பண்ண முடியும்.. பரபரப்பான போட்டியில் நடந்த பெரிய ‘திருப்புமுனை’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி நேற்று (06.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை மும்பை அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்னில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இப்படி விக்கெட் ஒருபக்கம் போய்கொண்டிருக்க, ஜோஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் சிக்ஸ், பவுண்டரி என விளாசி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அதனால் இவரது எடுக்க முடியாமல் மும்பை அணி திணறி வந்தது. அப்போது ஜேம்ஸ் பட்டின்சன் வீசிய ஓவரில் பட்லர் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பவுண்டரி லைனில் நின்ற பொல்லார்டு அதை கேட்ச் பிடித்து ஜோஸ் பட்லரை (44 பந்துகளில் 70 ரன்கள்) அவுட் செய்தார். இந்த விக்கெட் மும்பை அணிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இதனை அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சரை (24 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 136 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்