‘தல’ய இப்டி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. உருகும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு தோனிக்கு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி இரு ஓவரின்போது தோனி விளையாட சிரமப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இளம்வீரர் ப்ரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார்.

இந்த நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 1 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த அம்பட்டி ராயுடுவும் 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். விக்கெட்டுகள் ஒரு புறம் போய்கொண்டு இருந்தாலும், மறுபுறம் டு ப்ளிஸிஸ் தனது நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 22 ரன்கள் எடுத்திருந்தபோது டு ப்ளிஸிஸ் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

இதில் ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சாம் குர்ரன் 5 பந்துகளில் 15 ரன்கள் (2 சிக்ஸர்கள் உட்பட) அடித்தார். ஆனாலும் 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் தோனி 47 ரன்கள் அடித்தார். கடைசி இரு ஓவர்களில் தோனி விளையாட மிகவும் சிரமப்பட்டார். 19-வது ஓவரில் சென்னை அணியின் பிசியோ (physio) மைதானத்துக்குள் வந்து தோனியின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். பின்னர் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தோனி தனது ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனாலும் கடைசி வரை சிரமத்துடனேயே அவர் விளையாடினார். இது தோனி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்