“#DefinitelyNot!”.. ‘மூனே பேர்தான்.. மொத்த ஆட்டமும் மாறியது’!.. “செம்மயா வொர்க் அவுட் ஆன தோனியின் மேஜிக்!”..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே அணி பஞ்சாப் அணியுடன் ஆடியது இதில் சிஎஸ்கே டாஸ் வென்றதும் சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதிலும் இன்று சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

தொடக்கத்தில் இருந்து பவுலர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்தினார்கள். பவர் பிளேவில் பஞ்சாப் ஆதிக்கம் செலுத்தினாலும் போக போக சிஎஸ்கே, ஆட்டத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. எப்படி அதிலும் இன்று லுங்கி எங்கிடி , தாஹிர் ஓவர் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்று லுங்கி எங்கிடி மயங்க் அகர்வால், கே எல் ராகுல் என்ற இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் விக்கெட்டை, அவர் சதம் அடிக்கும் முன் தாஹிர் சுருட்டினார்.

நீஷமின் விக்கெட்டையும் லுங்கியும், பூரணின் விக்கெட்டை தாகூரும் காலி செய்ய, பஞ்சாப்பின் பேட்டிங் ஆர்டர் சரசரவென்று சரிய, சிஎஸ்கே மீண்டும் ஃபார்முக்கு வந்தது. கடைசியில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர் முடிவுகளில் 153 ரன்கள் எடுத்தது.

பின்னர் பேட்டிங் ஆடவந்த சென்னை அணியின் கெய்க்வாடு 49 பந்துகளில் 62 ரன்களும், டூபிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களும் அம்பதி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் எடுத்துள்ளன. மொத்தத்தில் 18.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் 154 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்தில் இருக்கிறது.

இதுவரை நடந்த 13 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு வொர்க் அவுட் ஆகாத தோனியின் மேஜிக் இன்றுதான் வொர்க் அவுட் ஆகியுள்ளது எனலாம். தோனியின் பவுலிங் ரொட்டேஷன் இத்தனை சீசன்களில் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக உதவாத நிலையில், இன்று தோனிக்கு கைகொடுத்த பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் போட்டியை மாற்றியது. பேட்டிங்கிலும் ருத்துராஜ் பட்டையை கிளப்பியதை அடுத்து சென்னை அணி எளிதாக இலக்கை அடைந்தது.

முன்னதாக மேட்ச் தொடங்கும் முன் தோனி ‘இன்று தோற்க மாட்டோம்’ என்பதை சொல்லும் விதமாக, இது கடைசி போட்டியாக இராது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்