‘டெத்’ ஓவர்ல முதல் பாலே இப்டியா.. பல திட்டம் போட்ட ‘தல’.. ஆனா கடைசி வரை ‘அவர’ அவுட் பண்ண முடியல..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று (10.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதில் படிக்கல் 33 ரன்னில் அவுட்டாகினார். ஆனால் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 90 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
இப்போட்டியில் விராட் கோலியை அவுட் செய்ய, பந்துவீச்சில் பல சோதனைகளை தோனி முயற்சித்து பார்த்தார். ஆனாலும் கோலி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இந்தநிலையில் கடைசி ஓவரை பிராவோ வீசினார். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விளாசினார். இதனால் உடனே தோனி வந்து பிராவோவிடம் ஆலோசனை கூறிவிட்டு சென்றார். இதனை அடுத்து தொடர்ந்து நான்கு பந்துகளில் விராட் கோலி 2 ரன்கள் ஓடினார். மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி ஓவரிலும் தொடர்ந்து நான்கு பந்துகளில் 2 ரன்கள் ஓடியது அவரது ஃபிட்னஸை காட்டுகிறது என விராட் கோலியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நம்ம 'சிஎஸ்கே' 'டீம்'குள்ள என்ன தான் பிரச்சன??..." பரபரப்பை உண்டு பண்ணிய 'சென்னை' வீரரின் 'ட்வீட்'... கலக்கத்தில் 'ரசிகர்'கள்!!!
- "ஒரு காலத்துல Chasing-ல கலக்கினவரு... இப்ப, என்ன ஆச்சு...?" - 'எல்லாத்துக்கும் தோனிதான் காரணமா?!!'... 'கேதார் ஜாதவ் சறுக்கியது எப்படி???'
- 'இது தோனியோட ஸ்கெட்ச் மாதிரி இருக்கே... ஸ்கெட்சே தோனிக்கு தான்'!.. CSKக்கு எதிரான மேட்ச்சில்... தினேஷ் கார்த்திக்-இன் அசத்தல் கேப்டன்சி!
- "அவரா...? அவரு, டீமோட தேவையில்லாத Decoration!... எப்படியும் சம்பளம் வந்துடும்... அப்புறம் என்ன?" - மோசமாக கிண்டல் பேசி 'CSK-வை சீண்டிய சேவாக்!!!'...
- வேற வழியில்ல.. இனி ‘அவர’ தான் விளையாட வச்சாகணும்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்..!
- Watch: என்ன கேப்டன் நீங்களே ‘இப்டி’ பண்ணலாமா.. ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘அடிக்கிறாங்கனு தெரியுதுல’.. ‘கொஞ்சம் பார்த்து போடுங்க பாஸ்’.. கேப்டனை ‘கதிகலங்க’ வைத்த ரெண்டு பேர்..!
- மொத்த பழியையும் ‘ஜாதவ்’ மேல போடாதீங்க.. திடீர்னு தோனி பக்கம் ‘திரும்பும்’ நெட்டிசன்கள்.. என்ன காரணம்..?
- 'தமிழில் Tips கொடுத்த தினேஷ் கார்த்திக்'... 'அப்படியே Follow பண்ண வருண்'... 'தோனி விக்கெட்டை KKR வீழ்த்தியது இப்படித்தான்!!!
- “ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா?”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு!”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்!”.. பயிற்சியாளர் பிளமிங்!