ஆளே ‘அடையாளம்’ தெரியல.. இந்த ரெண்டு பேரும் ‘யாருன்னு’ தெரியுதா..? செம ‘வைரலாகும்’ போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி நேற்று (28.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் பட்டிகல் 74 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். போட்டி முடிந்த பின் கடைசியாக சூர்யகுமார் யாதவ் சைகை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அதேபோல் மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா பெங்களூரு பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸுடன் சண்டைக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடிப்பது போல கையை நீட்டி பாண்ட்யா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாததுபோல புது கெட்டபில் மைதானத்தில் நின்றார். அவருடன் நீண்ட முடியுடன் அம்பயர் பாஷிம் பதக்கும் உடன் நின்றார். இவர் சமீபத்தில் மைதானத்துக்குள் நீண்ட முடியுடன் வந்து ஆணா? பெண்ணா? என நெட்டிசன்களை கன்ஃப்யூஸ் செய்து வைரலானவர். ஆனால் இவர் ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாண்ட்யாவும், பாஷிம் பதக்கும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்