இனிமேதான பாக்க போறீங்க இந்த ‘காளியோட’ ஆட்டத்த.. ‘யுனிவெர்சல் பாஸ்’ அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி இன்று (15.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் அணியின் ப்ளேயின் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பஞ்சாப் அணி இருந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த சீசனில் இதுவரை விளையாடாமல் இருந்து பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் இன்றைய ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை கெயில் கொண்டிருக்கிறார். அதனால் இன்றைய போட்டி நடைபெறும் சிறிய மைதானமான ஷார்ஜாவின் அவர் சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் அணியில் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஏனென்றால் இனி விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம். இந்த நிலையில் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் செல்ல 7 போட்டிகளிலும் வெல்ல முடியும் என கெயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நார்மல் சிக்ஸ்-க்கு 6 ரன் ஓகே...' ஆனா 'அந்த' சிக்ஸ்-க்கு எக்ஸ்ட்ரா ரன் கொடுக்கணும்...! - கே. எல் ராகுல் வேண்டுகோள்...!
- "முதல்ல உங்க ரெண்டு பேரையும்... ஐபிஎல்ல இருந்து Ban பண்ணனும்!!!"... 'கோலி கிட்டயே காரணத்துடன் சொல்லி'... 'ஷாக் குடுத்த இளம்வீரர்!'...
- Video: தெரியாம ‘இடிச்ச’ மாதிரி தெரியலயே.. கடைசி ஓவரை பரபரப்பாக்கிய சம்பவம்..!
- அத செய்றது என் ‘கடமை’.. ஒரே ஒரு ‘ட்வீட்’ல மொத்த சர்ச்சைக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்சிட்டீங்களே தலைவா..!
- ‘யாரு சாமி நீ’!.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுதான் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..!
- ‘கேப்டன் கூல்’க்கு என்ன ஆச்சு.. அடிக்கடி கோபப்பட்ட ‘தல’.. இதுதான் காரணமா..?
- இதெல்லாம் ரொம்ப ‘தப்பு’.. இவ்வளவு ‘மோசமாவா’ நடந்துக்குறது.. இளம்வீரருக்கு எதிராக ‘கொதித்த’ ரசிகர்கள்..!
- 'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா???'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...!!!'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO!'...
- 'அவரு இல்லாம இருக்கறதுதான் டீமுக்கும் நல்லது'... 'ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் பிளேயரை'... 'விளாசித் தள்ளிய பிரபல வீரர்!!!'... 'என்ன காரணம்?!!'...
- 'ஆமா, இது அவரோட Trickல?!!'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்!!!'...