போன மேட்ச்ல ‘கேம் சேஞ்சரே’ அவர்தான்.. 'Key' ப்ளேயர் இல்லாம களமிறங்கும் கேப்டன்.. கைகொடுக்குமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டி இன்று (12.10.2020) சார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தநிலையில் கொல்கத்தா அணியில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு பதிலாக டாம் பான்டன் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து தெரிவித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘டாஸை இழந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் பேட்டிங் செய்திருக்கலாம். கிட்டத்தட்ட 39 ஓவர்களில் எங்களை ஆதிக்கம் செலுத்திய KXIP போட்டியில் நடந்ததைப் போல பந்துவீச்சாளர்கள் தங்களை நம்புவது முக்கியம். டாம் பான்டன் ஒரு ஸ்பெஷல் வீரர். சுனில் நரைனுக்கு பதிலாக இவர் விளையாடுகிறார்’ என அவர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு சுனில் நரேனின் பந்துவீச்சு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக இவர் வீசிய இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணி ரன் அடிக்க திணறியதே இதற்கு சான்று. இன்றைய போட்டியில் சுனில் நரேன் இல்லாதது கொல்கத்தா அணிக்கு சற்று பின்னடவை கொடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

சுனில் நரேனின் பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்திருப்பது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த போட்டியில் காயம் காரணமாக ரசல் வெளியேறினார். அதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என கேள்வி எழுந்தது. இந்தநிலையில் காயத்தில் இருந்து மீண்டு அவர் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்