Video: ‘2 இன்ச்’ல பறிபோன வெற்றி.. இப்டியெல்லாமா ‘சோதனை’ வரணும்.. மனமுடைஞ்சு போன ‘கேப்டன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நேற்று (10.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், சுப்மன் கில் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் (74 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால் (56) ஜோடி அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. 115 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை (மயங்க் அகர்வால்) பஞ்சாப் அணி இழந்தது.

இதனை அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் (16 ரன்கள்), சிம்ரான் சிங் (4 ரன்கள்) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். ஆனாலும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் 19-வது ஓவரில் ப்ராஷித் பந்துவீச்சில் போல்ட்டாகி கே.எல்.ராகுல் வெளியேறினார். பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியில் 158 ரன்களை எடுத்த பஞ்சாப் அணி, கடைசி ஓவரின் கடைசி பந்தில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி அல்லது 6 ரன்கள் அடித்தால் சூப்பர் ஓவருக்கு செல்லும் நிலையில் இருந்தது. அப்போது சுனில் நரேன் வீசிய கடைசி பந்தை பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பந்து பவுண்டரி லைனுக்கு சுமார் 2 இஞ்ச்-க்கு முன்னால் குத்தி சென்றது. இதனால் 4 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டதால் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்