"ஏதோ பெருசா சொன்னீங்க, இப்ப என்னாச்சு???... அந்தப் பொறுப்பு இருந்தாவாவது ஏதாச்சும் நடந்திருக்கும்"... 'விளாசிய பிரபல வீரர்!"...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேகேஆர் அணியின் தொடர் சொதப்பலால் தினேஷ் கார்த்திக்கை கவுதம் கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆப் செல்லும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. மிக மோசமான ரன் ரேட் உடன் இருப்பதால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்வது கடினம் எனவே கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என தினேஷ் கார்த்திக் கேகேஆர் கேப்டன்சியை ராஜினாமா செய்தது தவறு என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர்,  "கொல்கத்தா அணியின் கேப்டன்சி மாறியதில் இருந்தே அந்த அணி பிரச்சனையை சந்தித்து வருகிறது. இது முழுக்க முழுக்க தினேஷ் கார்த்திக்கின் தவறுதான். உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பது இதில் இருந்தே தெரிகிறது. உங்கள் பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என கூறிவிட்டு கேப்டன்சியை விட்டு சென்றீர்கள். ஆனால் அது கொஞ்சம் கூட வேலை செய்யவில்லை. ஒருவேளை உங்களுக்கு கேப்டன் பொறுப்பு இருந்திருந்தால், அந்த அச்சம் காரணமாகவாவது நன்றாக ஆடி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நான் 2014ல் கேப்டனாக இருந்த போது இதேபோல வரிசையாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனேன். அப்போது கேப்டன்சியில் இருந்த பொறுப்பு என்னை நன்றாக ஆட தூண்டியது. ஒரு கேப்டனாக சரியாக ஆட வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாக நான் பார்மிற்கு திரும்பினேன். அதேபோல நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாதபோதும் கேப்டன்சி மூலம் அணியை வெற்றிபெற வைத்தேன். இதனால் அணியின் வெற்றிக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் அந்த வாய்ப்பை தவற விட்டு மோசமான முடிவை எடுத்துவிட்டார்" என கம்பீர் விளாசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்