‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா’!.. கேப்டனை வேர்த்து விறுவிறுத்துப்போக வச்ச ‘அந்த’ வீரர் யார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான 16-வது லீக் ஐபிஎல் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களும் ப்ரித்வி ஷா 66 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபநிலையில் இருந்த கொல்கத்தா அணியை மோர்கன் -ராகுல் திருப்பதி கூட்டணி அதிரடியாக விளையாடி மீட்டது.

இதில் டெல்லி அணி வீரர் ரபாடா வீசிய ஒரு ஓவரில் மோர்கன் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வியர்த்து விறுவிறுத்துப்போனார். இதனை அடுத்து 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து மோர்கன் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து ராகுல் திருப்பதியும் (16 பந்துகளில் 36 ரன்கள்) போல்ட்டாகி வெளியேறினார். இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்களை கொல்கத்தா கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்