கப்பல்ல நெறைய ‘ஓட்ட’ இருக்கு.. தொடர் தோல்வியால் சோர்ந்துபோன ‘தல’.. எங்க ‘தப்பு’ நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று (10.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியை பொருத்தவரை அம்பட்டி ராயுடு 42 ரன்களும், இளம்வீரர் ஜெகதீசன் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.



இந்தநிலையில் போட்டி முடிந்த பின் பேசிய தோனி, இன்றைய போட்டியில் சென்னை அணி பேட்டிங் சரியாக செய்யவில்லை என்றும், மிடில் ஆர்டர் 6-14 ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கப்பலில் (அணியில்) நிறைய ஓட்டைகள் இருப்பதாகவும், ஒன்றை சரி செய்தால் மற்றொன்று தண்ணீர் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். அடுத்த போட்டியில் குறைகளை ஆராய்ந்து வலிமையுடன் வருவதாக தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்