"இது தாங்க எங்க Master பிளான்...!" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி???'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...!!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேதான் வெற்றிபெறப் போகிறது என எல்லோரும் கணித்திருந்த நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் முதல் பாதியிலும் சிஎஸ்கேவின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். கொல்கத்தாவின் வலுவான பேட்டிங் ஆர்டரை கட்டுப்படுத்தி அந்த அணியை சிஎஸ்கே பவுலர்கள் 167 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இதையடுத்து சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது வாட்சன் விக்கெட்டை எடுக்க நரைன் களமிறக்கப்படுவார் என  எதிரார்த்த நிலையில், 11 ஓவர் வரை நரைனும், ரசலும் வரவில்லை.

சிஎஸ்கே முதல் 10 ஓவரில் சிறப்பாக பேட்டிங் செய்தது. பின்னர் களத்தில் வாட்சன், தோனி இருவரும் இருந்தபோது, இரண்டு பேருமே ஸ்பின் பவுலர்களின் பந்துகளில் சரியாக ஆட மாட்டார்கள் என்பதால்,  அப்போது மாறி மாறி ஸ்பின் பவுலர்கள் போட்ட ஓவரால் மொத்தமாக சிஎஸ்கே ரன் ரேட் குறைந்தது. அதன்பிறகு வாட்சன் விக்கெட்டை நரைன் எடுக்க, இன்னொரு பக்கம் தோனி விக்கெட்டை சக்ரவர்த்தி எடுத்தார்.

15 ஓவர்கள் வரை சிஎஸ்கே வெல்ல போகிறது என அனைவரும் நினைத்த நிலையில், கடைசியில் இப்படி இரண்டு முக்கிய பவுலர்களை தினேஷ் கார்த்திக் இறக்குவார் என்று யாரும் நினைக்கவில்லை. பொதுவாக மிடில் ஓவரில் விக்கெட் எடுக்க நினைப்பதை போல செய்யாமல், தினேஷ் கார்த்திக் ரன் செல்வதை கட்டுப்படுத்தி சிஎஸ்கேவிற்கு பிரஷர் கொடுத்தது கொல்கத்தா அணிக்கு பெரிதும் உதவியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பு வரை தினேஷ் கார்த்திக் கேப்டன்சி மீது எல்லோருக்கும் சந்தேகம் இருந்துவந்த நிலையில், தற்போது அவர் அதிலிருந்து மீண்டு காட்டியுள்ளார்.

போட்டிக்கு பின் பேசியுள்ள கேப்டன் தினேஷ் கார்த்திக், "ஒவ்வொரு அணியிலும் ஒரு முக்கிய வீரர் இருப்பார். எங்கள் அணியில் சுனில் நரைன் மிக முக்கியமான வீரர். எங்கள் அணியில் சுனில் நரைன் போன்று ஒரு வீரர் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். அவருக்கு குறைந்தபட்சமாக எங்களால் செய்யக்கூடியது மோசமான 2-3 போட்டிகளிலும் அவரை ஆதரிப்பதே.

சுனில் நரைன் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்காக இன்றைய போட்டியில் அவரை துவக்க வீரராக களமிறக்காமல் ராகுல் த்ரிபாட்டியை களமிறக்கினோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை மிக சிறப்பாகவே துவங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் நான் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களும் எனது நம்பிக்கையை காப்பாற்றிவிட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்