Video: நாங்க தோற்கவா ‘சாமிய’ கும்டுறீங்க.. ரெண்டே பந்தில் சோலிய முடிச்ச ஜடேஜா.. செம ‘வைரல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடைரஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 87 ரன்கள் அடித்து அசத்தினார்.
சென்னை அணியை பொருத்தவரை லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளும், மிட்சல் சான்ட்னர், ஜடேஜா, கரன் ஷர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.
இதில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் தோனி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, சாம் குர்ரன் கூட்டணி அணியின் வெற்றி பொறுப்பை கையில் எடுத்தது.
இந்தநிலையில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் நின்ற ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜடேஜா, அடுத்த 7 பந்துகளில் 28 ரன்கள் விளாசி தள்ளினார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்துள்ளது.
கடைசி ஓவரின் போது சென்னை அணி தோற்க வேண்டும் என கொல்கத்தா அணியின் உரிமையாளர்கள் கடவுளை வேண்டிக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாதியில் எழுந்து சென்ற ‘ரோஹித்’.. சண்டைக்குப்போன ‘பாண்ட்யா’.. கோபமாவே இருந்த ‘கோலி’.. அப்டி நேத்து என்னதான் நடந்தது..?
- சிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’?
- "எனக்கு தெரிஞ்சு இந்தியாவுல".. ‘ஐபில் அணி’ நிர்வாகம் பகிர்ந்த புகைப்படத்துக்கு ‘ஒரு படிமேலே போய்’ ரசிகர் கொடுத்த ‘வைரல்’ கமெண்ட்!
- மனசுல இருந்த பல வருஷ ‘வலி’.. இது போதுமா இப்போ அவர டீம்ல எடுக்க..? ‘வெகுண்டெழுந்த’ ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!
- இந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா?.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..!
- இனிமேல் ‘தல’ய இந்த ஜெர்சியில பார்க்க முடியாதே.. உருகிய ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ‘சர்ப்ரைஸ்’..!
- இந்த மேட்ச்லையும் ‘ஹிட்மேன்’ இல்லையா..! என்னதான் ஆச்சு..? அவர இப்டி பார்க்க முடியல..!
- "எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்... அவரு கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டாரு"... 'சேவாக் பரபரப்பு கருத்து!!!'...
- 'ஸ்கெட்ச் ரோஹித்துக்கு மட்டும் இல்ல... மும்பை இந்தியன்ஸ் 'டீம்'க்கு!?'.. இந்திய அணியில்... சூர்யகுமார் யாதவ் நிராகரிப்புக்கு பின்... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- 'எத்தன டிவிஸ்ட்டு?!!'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல!!!'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்!'...