இந்த '3 பேரையும்' தூக்குறோம்.. கட்டம் கட்டும் 'சிஎஸ்கே'.. நெஜமாவே 'மாஸ்டர்' பிளான் தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக சென்னை அணி திகழ்கிறது. தோனி வழிநடத்தும் இந்த அணி 2016, 2017-ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்டது. எனினும் 2018-ம் ஆண்டு மீண்டும் வந்து மீண்டும் கோப்பையை தட்டி சென்றது. 2019-ம் ஆண்டு 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுவரை 3 முறை வெற்றிக்கோப்பையை முகர்ந்துள்ள சென்னை அணி தான் ஆடிய  எல்லா சீசன்களிலும் பிளே ஆப்புக்குள் சென்ற அணி என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. இந்தநிலையில் சரியாக பெர்பார்ம் செய்யாத 3 பிளேயர்களை இந்த வருடம் ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி விடுவிக்கலாம் என கூறப்படுகிறது. அந்த 3 பேர் யார்? என்பதை இங்கே பார்க்கலாம்.

கரண் ஷர்மா

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அணியால் ரூபாய் 5 கோடிக்கு வாங்கப்பட்ட கரண் 7 மேட்ச்களில் ஆடி1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். ரன்களையும் தாராளமாக விட்டு கொடுப்பதால் இந்த ஆண்டு சென்னை அணி இவரை விடுவிக்கும் என தெரிகிறது.

முரளி விஜய்

சென்னை அணியின் செல்லப்பிள்ளையான முரளி விஜய் டெஸ்ட் மேட்சுகளில் சிறந்த ஓபனிங் கொடுக்க கூடியவர். சென்னை அணியின் ஓபனிங் வீரராகவும் களமிறங்கி விளையாடியவர். கடந்த ஆண்டு சென்னை அணி 2 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 3 மேட்சுகளில் விளையாடிய முரளி விஜய் 76 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் இந்த ஆண்டு சென்னை அணி இவரை விடுவித்து விட்டு வேறு ஒரு இளம்வீரரை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கேதார் ஜாதவ்

அதிர்ஷ்டம் சிலருக்கு பொத்துக்கொண்டு கொட்டும் என்பார்களே அதுபோல ஒரு வீரர் இவர். நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் விளையாடினர். எனினும் தன்மீது உள்ள எதிர்பார்ப்பினை இவர் சரியாக நிறைவேற்றவில்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அணியால் 7.8 கோடிகளை கொடுத்து எடுக்கப்பட்ட இவர் மொத்தமாக 14 மேட்சுகள் விளையாடி மொத்தமாக 162 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டாலும் கூட, சரியாக விளையாடவில்லை என்பதால் வரும் ஏலத்தில் சென்னை அணி இவரை விடுவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்