‘புரட்டிப்போட்ட ஒரே ஒரு மேட்ச்!’..‘போட்டு வெச்ச டேபிள் எல்லாம் கொலாப்ஸ்!’.. ‘சிஎஸ்கேவை தவிர மற்ற அணிகளின் நிலை என்ன?’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. பின்னர் 196 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான்18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதில் 60 பந்துகளில் 107 ரன்களுடன் (3 சிக்ஸ்,14 பவுண்டரி) இறுதிவரை ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆடினார். சஞ்சு சாம்ஸன், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி 82 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். குறிப்பாக 13 முதல் 16-வது ஓவர்கள் வரை இருவரும் மும்பை அணியைத் திணறவிட்டனர். டிரன்ட் போல்ட், பட்டின்ஸன், பும்ரா, சாஹர் ஆகியோர் வீசிய பந்துகள் கூட சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. ஸ்டோக்ஸ், சாம்ஸனைக் கட்டுப்படுத்த முடியாமல் மும்பை கேப்டன் பொலார்ட் திணறியதை காண முடிந்தது. ஆக, இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருப்பதால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலும், கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலும்தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்றைய மேட்சினால் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.

முதல் 3 இடங்களில் இருக்கும் மும்பை, டெல்லி, ஆர்சிபி அணிகள், கடந்த 3 ஆட்டங்களிலும்  தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியாமல் உள்ளன. இதே கடைசி 3 இடங்களில் இருக்கும் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று போட்டியை இன்னும் இறுக்கமாக மாற்றியுள்ளன.

இதனால 4-வது இடத்தை யார் பிடிப்பார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனிடைடே கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் இருப்பதால், 3 போட்டிகளில் 6 புள்ளிகள் வரை வெற்றி பெற்றாலே போதும், ப்ளே ஆஃப்பை உறுதி செய்யலாம்.

இதேபோல் 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இதே நிலைதான். இதில் கொல்கத்தா அணியின் அடுத்த இரு வெற்றி அல்லது தோல்விகள் பஞ்சாப் அணியின் நிலைமையை தீர்மானிக்க வாய்ப்பு உண்டு.

இதில் முக்கியமான விஷயம் ராஜஸ்தான் அணி அதிகபட்ச ரன் ரேட்டில் நேற்று வென்றதால், இந்த ஐபிஎல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக சென்னை அணி வெளியேறியது. அடுத்துவரும் 2 போட்டிகளையும் சிஎஸ்கே வென்றாலும்  பயனில்லை. முதல் முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்