‘கேம் சேஞ்சர் விருது .. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது.. பவர் பிளேயர் விருது!’.. IPL2020-யில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா காரணமாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

அத்துடன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பல்வேறு ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி  கேஎல் ராகுலுக்கும் (14 போட்டிகளில் 670 ரன்கள்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி ரபாடாவுக்கும் (30 விக்கெட்டுகள்) , வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) விருது தேவ்தத் படிக்கலுக்கும் (ஆர்சிபி) ஃபேர் பிளே விருது மும்பை அணிக்கும், கேம் சேஞ்சர் விருது கேஎல் ராகுலுக்கும் (பஞ்சாப்) , சூப்பர் ஸ்டிரைக்கர் விருது பொல்லார்டுவுக்கும் (மும்பை) அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது இஷான் கிஷணுக்கும் (மும்பை- 30 சிக்சர்), பவர் பிளேயர் விருது  டிரெண்ட் போல்டுக்கும் (மும்பை), மதிப்பு மிகுந்த வீரருக்கான விருது ஜோப்ரா ஆர்ச்சருக்கும் (ராஜஸ்தான்) வழங்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்