‘கோலியைத் தொடர்ந்து’.. மற்றுமொரு அணியின் கேப்டனுக்கு ‘12 லட்சம் ரூபாய்’ அபராதம்! - காரணத்துடன் அறிவித்த ஐபிஎல் நிர்வாகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின்படி  12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம் குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 13 ஆவது சீசனில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த முதல் தோல்வியை பற்றி பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ்க்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்ததாகவும், எளிதில் அந்த இலக்கை அடைந்துவிடலாம் என நினைத்தபோது,  ஹைதராபாத் அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு, நெருக்கடி கொடுத்ததால், 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்ததாகவும், ஹைதராபாத் அணி, பேட்டிங், பௌலிங், பீல்டிங்  என அனைத்திலும் தங்களை விஞ்சியதாகவ்யும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்