'நாங்களும் குடும்பத்த பார்க்க வேண்டாமா!?... என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?'.. 'ரொம்ப மன உளைச்சலா இருக்கு!'.. விராட் வேதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாக ஏறக்குறைய இந்திய வீரர்கள் அனைவரும் யூஏஇயில் உள்ளனர்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடருக்காக யூஏஇயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், ஒரு பயோ-பபள் முறையிலிருந்து மற்றொரு பயோ பபள் முறைக்கு மீண்டும் செல்வது மிகுந்த மன உளைச்சலை தரும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.  

இந்திய வீரர்களின் உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு தொடர்களை வடிவமைக்க வேண்டும் என்று எப்போதுமே குரல் கொடுப்பவராக உள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

தங்களின் குடும்பத்தினரை பிரிந்து நீண்ட நாட்கள் இருந்தால் அவர்களின் மனநிலை மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகும் என்ற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

ஏற்கனவே, இரண்டு மாதங்களாக ஒரு பயோ பபள் முறையில் இருக்கும்போது அடுத்ததாக மற்றொன்றில் இருப்பது மிகுந்த மனஉளைச்சலை தரும் என்று தற்போது விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆர்சிபியின் யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள விராட் கோலி, அடுத்தடுத்து பயோ பபளை எதிர்கொள்வது கடுமையானது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யூஏஇயில் இந்திய வீரர்கள் உள்ள நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடர் ஜனவரி மாதம் வரை நீடிக்க உள்ளது.

இந்நிலையில், ஏறக்குறைய 80 நாட்கள் குடும்பங்களை பிரிந்து பயோ பபள் காரணமாக ஒரே இடத்தில் வேறு எதையும் நினைக்காமல் இருப்பது மிகுந்த சவாலான விஷயம் என்றும் விராட் குறிப்பிட்டுள்ளார். 

சிஎஸ்கே வீரர் சாம் கரன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாம் 3 வடிவங்களிலும் ஆடும்போது சிலவற்றை தவிர்த்துவிட்டு ஆடுவது சிறப்பானது என்று கரன் கூறியுள்ள நிலையில், ஐபிஎல் முடிந்து சொந்த நாட்டிற்கு திரும்ப நாட்களை எண்ணி வருவதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்