'போதும்... போதும்... மீம்ஸ் பெருசா போயிக்கிட்டிருக்கு'!.. மோரிஸ் அடித்த 'அந்த' மாஸ் ஷாட்!.. இணையத்தில் விருந்து வைக்கும் ரசிகர்கள்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான மிரட்டல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் மற்ற முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜாஸ் பட்லர் (2), மணன் வோஹ்ரா (9), சஞ்சு சாம்சன் (4), சிவம் துபே (2) போன்ற மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பிறகு களத்திற்கு வந்த டேவிட் மில்லர் தனி ஒருவனாக போராடி 43 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தனி ஆளாக போராடிய டேவிட் மில்லரும் விக்கெட்டை இழந்துவிட்டதால் டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களத்திற்கு வந்த கிறிஸ் மோரிஸ், இதற்காகவே இத்தனை நாளாய் காத்திருந்ததை போன்று கடைசி இரண்டு ஓவர்களில் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெறச் செய்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான் மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

 

 

 

இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும், பாராட்டுகளும், மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் என பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்